தடுப்பனையில் தூண்டுள்ள மண்ணை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் ஈசூர் வள்ளிபுரம் பகுதியில் உள்ள பாலாற்று குறுக்கே விவசாயிகள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ரூபாய் 31 கோடி ரூபாயில் கடந்த 2019 ஆம் ஆண்டு 700 மீட்டர் நீளமும் நான்கு அடி உயரம் கொண்ட தடுப்பணை கட்டப்பட்டது கட்டப்பட்ட தடுப்பனையால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உயர் மட்டம் உயர்ந்தது இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் குடித்த தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது அதே போன்று விவசாயத்திற்கும் போதிய நீர் ஆதாரமாக உள்ளது வரலாற்றில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் சுமார் 2 அடி அளவிற்கு மண் சேர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்
தடுப்பனையில் கூடுதலாக தண்ணீர் தேக்க உடனடியாக தடுப்பணையில் அருகே உள்ள மண்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.