மதுராந்தகத்தில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

50பார்த்தது
மதுராந்தகத்தில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல் எல்லைக்குள் உட்பட்ட கள்ளபிரான்புரம் ஊராட்சி, செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எல்லம்மாள், 75. இவர், நேற்று வீட்டில் இருந்தபோது, வீட்டின் அறையில் இருந்த 'சுவிட்ச் பாக்ஸ்'ல் தவறி அவரது கை பட்டுள்ளது. இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து, துாக்கி வீசப்பட்டுள்ளார். உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின், மருத்துவமனையில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின்படி, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பின், பிரேத பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி