தமிழக சுற்றுலாத்துறை டிசம்பர் ஜனவரியில் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நடத்துகிறது.
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் ஒரு மாத காலத்திற்கு நடத்தப்படும் விழாவில் தினசரி மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நாட்டியங்கள், கரகம், தப்பாட்டம், ஒயிலாட்டம், காவடி உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வருட நாட்டிய விழா கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 20-ஆம் தேதி வரை 1 மாதம் நடக்கிறது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை ஒட்டி அவருக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு வாரத்திற்கு அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகள் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை 6 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆறு நாட்களுக்கு பிறகு மீண்டும் மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகள் கடற்கரை கோயில் திறந்த வெளி மேடையில் தொடங்கின.
இன்று திருப்பத்தூர் குருமன்ஸ் சேவையாட்ட குழுவினரின் தப்பாட்டம், பறை இசை நிகழ்ச்சியும், கேரளா அம்மனூர் ரஜனீஷ் கூத்தியாட்டம், கதகளி நிகழ்ச்சிகள் நடந்தன. 6 நாட்களுக்கு பிறகு தொடங்கிய விழாவில் வெளிநாட்டு பயணிகள் ஆர்வமாக பங்கேற்று இந்நிகழ்ச்