பசுமைதாயகம் சார்பில் பாமக நிறுவனர் அவர்களின் பிறந்தநாள் விழா

68பார்த்தது
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு பசுமை தாயகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெரிய வெளிக்காடு கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன டாக்டர் ராமதாஸ் அவர்களின் 86 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரிய வெளிக்காடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெட்காளி அம்மன் ஆலயத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் நீண்ட ஆயுளோடு நீடோடி வாழ வேண்டி சிறப்பு அபிஷேக ஆராதனை செய்துஅந்த ஆலயம் சுற்றி உள்ள ஐந்து ஏக்கர் இடத்தில் பசுமை தாயகம் சார்பில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பசுமை தாயகத்தின் தலைவர் சுரேஷ் அவர்களின் ஏற்பாட்டில் 27 நட்சத்திர மரக்கன்றுகளை நட்டும் 500 கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர
தே. சாந்தமூர்த்தி முன்னாள் மாவட்ட செயலாளர் கி குமரவேல் இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நெம்மந்தம் ஆதிகேசவன் அச்சரப்பாக்கம் நகர செயலாளர் ஆ வே பக்கிரிசாமி மாவட்ட துணை தலைவர் சி எம் ஏழுமலை மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி