இரவுநேர காப்பகத்திற்கு இடம் தேடும் ஆலந்துார் மண்டலம்

58பார்த்தது
இரவுநேர காப்பகத்திற்கு இடம் தேடும் ஆலந்துார் மண்டலம்
சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலத்தில் இரவுநேர காப்பகம் ஒன்று ஆலந்துார் புதிய தெருவில் செயல்பட்டு வந்தது. அதில், 40க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். அந்த இடம் போதிய வசதி இல்லாததால் காப்பகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பழவந்தாங்கலில் உள்ள சமுதாயக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.


இடையில் கொரோனா தொற்று காரணமாக விரிவாக்கப்பணி தாமதமானது. மேலும், அந்த இடம் முதல் தளத்தில் அமைந்திருந்ததால், விரிவாக்கம் செய்தாலும் தங்க வசதிஇருக்காது என்பதால், பழவந்தாங்கல் சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்கள் மண்டலம் ஒன்பதில் உள்ள இரவு காப்பாகத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர்.

தற்போது, ஆலந்துார் மண்டலத்தில், 100 பேர் தங்கும் வசதியுடன் இரவு நேரக்காப்பகம் அமைக்க மாநகராட்சியினர் இடம் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி