உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூர் பாலாற்றங்கரை மீது கிராமத்திற்குசொந்தமான 500 ஆண்டுகள் பழமையான சந்தியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், இந்தாண்டிற்கான ஆடி திருவிழா, கடந்த வெள்ளிக்கிழமை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, காலை, மாலை நேரங்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
நேற்று முன்தினம் காலை மூலவர் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், மாலை 6: 00 மணிக்கு கோவில் வளாகத்தில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.