அ. தி. மு. க. , பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
By Rajasekar 56பார்த்ததுதிருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் ஊராட்சியில், திருப்போரூர் தெற்கு ஒன்றிய அ. தி. மு. க. , சார்பில், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், வரும் லோக்சபா தேர்தலையொட்டி, பூத் வாரியாக சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
பெண்கள் உட்பட அதிக உறுப்பினர்களை கட்சியில் இணைக்க வேண்டும். அதிக ஓட்டுகள் பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என, ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில், முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.