செங்கல்பட்டு: குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை; வாகன ஓட்டிகள் அவதி

72பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில்-அஞ்சூர் சாலை 5 கி.மீ. தூரம் உடையது. அஞ்சூர் ஊராட்சியில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்தச் சாலை வழியாக சிங்கப்பெருமாள் கோவில், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குத் தினமும் சென்று வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக அந்தச் சாலை முழுவதுமாகச் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. மேலும் சாலை முழுவதுமாகச் சேர் நிரம்பிய மழைநீர் தேங்கியிருப்பதால் அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் சாலையில் செல்ல முடியாமல் தினம்தோறும் கடுமையான அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 

குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அந்தச் சாலையில் செல்ல முடியாமல் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக மூன்று கிலோமீட்டர் சுற்றி மகேந்திர சிட்டி வழியாகச் செல்ல வேண்டிய ஒரு சூழல் உருவாக்கியுள்ளது. எனவே இந்தச் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களைச் சீரமைத்து உடனடியாகப் புதிய தார் சாலை அமைத்து வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி