சென்னை, மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணை, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர்
சஞ்சய், 20; கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரி மாணவர்.
கடந்த மாதம் 27ம் தேதி, தன்னுடன் படிக்கும் சக மாணவர் பாலாஜி, 20, என்பவருடன் சேர்ந்து, மாலை கல்லுாரி முடிந்தவுடன் 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
மேடவாக்கம் மேம்பாலம் மீது பயணித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம், பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர்.
படுகாயமடைந்த இருவரும், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில்
சஞ்சய் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து, பள்ளிக்கரணை
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்விசாரிக்கின்றனர்.