மாமல்லபுரம்: குளத்தில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை..? குற்றச்சாட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பழக்காரன் சத்திரம் பகுதியில், முன்பு ரேஷன் கடை இல்லை. இப்பகுதியினர் பூஞ்சேரியில் உள்ள ரேஷன் கடையில், பொருட்கள் வாங்கி வந்தனர். தங்கள் பகுதியில் ரேஷன் கடை துவக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் வலியுறுத்தினர். இதையடுத்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், இப்பகுதியில் இருந்த ஒரு குடியிருப்பு கட்டடத்தில், பகுதிநேர ரேஷன் கடை துவக்கப்பட்டது. ரேஷன் கடைக்கு கட்டடம் கட்ட வலியுறுத்தப்பட்ட நிலையில், திருப்பூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கி, 9.13 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கடையானது குளத்தை துார்த்து கட்டியுள்ளதாகவும், குளத்தின் பெரும்பகுதியை, கிராவல் மண் நிரப்பி துார்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.