மறைமலை நகரில் லாரி மோதி கணவர் கண்முன் மனைவி பலி

65பார்த்தது
மறைமலை நகரில் லாரி மோதி கணவர் கண்முன் மனைவி பலி
மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன், 58. இவரது மனைவி வீரலட்சுமி, 54.

தம்பதி நேற்று முன்தினம் இரவு, மறைமலை நகர் 'டென்சி' ஜி. எஸ். டி. , சாலையோரம் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்க டி. வி. எஸ். , எக்ஸ். எல். , ஸ்கூட்டரில் சென்றனர்.

அதன்பின், ஜி. எஸ். டி. , சாலையில் வீட்டிற்கு சென்றபோது, மணலியில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற டேங்கர் லாரி, சந்திரனின் ஸ்கூட்டரில் மோதியது.

இதில், பின்னால் அமர்ந்திருந்த வீரலட்சுமி நிலைதடுமாறி கீழே விழுந்ததில், லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; சந்திரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரி ஓட்டுனரான கடலுாரைச் சேர்ந்த முத்துவேல், 50, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி