கருங்குழியில் போக்குவரத்து பாதிப்பு

66பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கருங்குழி என்னும் இடத்தில்

சாலை பணி நடைபெறுவதால் மதுராந்தகத்திலிருந்து கள்ளபிரான்புரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் சுமார் 7 கிலோமீட்டர் அளவில் அணிவகுத்து சாலையில் நிற்பதால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது

மேலவலம் பேட்டை கருங்குழி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்தவாறு வாகனங்களின் போக்குவரத்து பாதிப்பு சீர் செய்து வருகின்றனர்

இருப்பினும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பணி காரணமாக ஒரு வழி பாதையில் வாகனங்கள் செல்வதால் பெரிதும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது

பள்ளிகள் விடுமுறை நாள் என்பதால் சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்கள் அதிகப்படியாக செல்வதால் இந்த போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி