ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வண்டலூர் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் அருகே அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 180 வகையான 2500 க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இன்றைய ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே பார்வையாளர் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில பூங்காவிற்கு வருகை புரிந்த பார்வையாளர்கள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்துக் கொண்டும் விலங்குகளை கண்டு ரசித்துக்கொண்டு ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.