மொபைல்போன் பறிப்பு; 3 பேருக்கு சிறை

69பார்த்தது
மொபைல்போன் பறிப்பு; 3 பேருக்கு சிறை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடைச் சேர்ந்தவர் ராமு, 27. இவர், அதே பகுதியில் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடன், திருவாலங்காடு ஒன்றியம் அரிச்சந்திராபுரத்தைச் சேர்ந்த அன்வர், (25) என்பவர் பணியாற்றி வருகிறார்.

அன்வரின் உறவினர் வீட்டின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கடந்த வாரம் ராமு அரிச்சந்திராபுரத்திற்கு சென்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற வாலிபர்கள் சிலர், நண்பருக்கு போன் செய்துவிட்டு தருவதாக கூறி, ராமுவின் மொபைல்போனை வாங்கிக் கொண்டு தப்பியோடினர்.

இதுகுறித்து ராமு அளித்த புகாரின்படி, திருவலாங்காடு போலீசார் விசாரணையில், அரிச்சந்திராபுரத்தைச் சேர்ந்த இர்பான் அலி (21), ஷேக் யாசின் (19), பயாஸ் (19), என தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி