செங்கல்பட்டு: திறக்கப்படாத புது ரேஷன் கடை பவுத்தங்கரணை மக்கள் தவிப்பு

66பார்த்தது
செங்கல்பட்டு: திறக்கப்படாத புது ரேஷன் கடை பவுத்தங்கரணை மக்கள் தவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே, மதுராந்தகம் ஒன்றியம், நல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட பவுத்தங்கரணை கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக 3 கி. மீ. , துாரத்தில் நல்லுார் பகுதியில் செயல்படும் நியாய விலைக் கடையில், அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்றவற்றை பெற்று வருகின்றனர்.

பவுத்தங்கரணை பகுதியில் புதிய நியாய விலைக் கடை கட்டடம் அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து, 2022-23ம் ஆண்டு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நியாய விலைக் கடை கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பவுத்தங்கரணை பள்ளி வளாகம் அருகே இருந்த பழைய அங்கன்வாடி மைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, ஓராண்டுக்கு முன் புதிய நியாய விலைக் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக நியாய விலைக் கடை கட்டடம் செயல்படாமல், காட்சிப்பொருளாகவே உள்ளது.
இதனால், பொதுமக்கள் தற்போது வரை 3 கி. மீ. , துாரத்தில் உள்ள நியாய விலைக்கடைக்குச் சென்று வருகின்றனர். இதனால் முதியவர்கள் மற்றும் பெண்கள் பொருட்களை வீட்டிற்கு கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி