கல்லூரிக்கு உற்சாகமாக வந்த மாணவர்கள்

76பார்த்தது
கல்லூரிக்கு உற்சாகமாக வந்த மாணவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே அமைந்துள்ள எஸ். ஆர்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீக்ஷா திவாஸ் 2024 என்கிற தலைப்பில் முதலாம் ஆண்டு பயில வருகை புரிந்த மாணவ மாணவியர்களுக்கு புதுமுக நிகழ்வு மற்றும் அறிமுக விழா நடைபெற்றது விழாவில் மாணவ மாணவிகளுக்கு கல்வி பயணம் ஆணை மற்றும் ஐடி கார்டு வழங்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் வாசுதேவராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கணிதத்துறை தலைவர் லலித்குமார் வரவேற்புரை வழங்கினார்

இந்த நிகழ்வில் எஸ். ஆர். எம் கல்வி குழுமத்தின் இயக்குனர் ராமச்சந்திரன் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். மேலும் எந்த நேரத்திலும் உங்களுக்கு என்ன வேண்டுமோ என்னை அணுகலாம் அல்லது கல்லூரி நிர்வாகத்தை அணுகலாம் என மாணவர்களிடம் உரையாடினார்

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளரும் பேச்சாளருமான தமிழருவி மணியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அவர் மாணவர்களுக்கு கல்வியின் சிறப்பு குறித்தும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம் குறித்தும் மேலைநாட்டு அறிஞர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பேசினார்,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி