செங்கல்பட்டு: மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் ஊரப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு

78பார்த்தது
செங்கல்பட்டு: மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் ஊரப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி அபிராம் நகர் பகுதியில், கழிவுநீர் கால்வாய் இல்லாததால், மழைநீருடன் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. 

இதனால், அந்த சாலையை பயன்படுத்தும் பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர். ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அபிராம் நகர் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக செல்வதற்கு, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால், ஆங்காங்கே கழிவுநீர் குட்டை போல் தேங்கி, இப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர். மேலும், தற்போது பெய்த மழைநீரும் சீராக செல்லாமல், கழிவுநீருடன் கலந்து தெரு சாலைகளில் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம், தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. 

இது தொடர்பாக, இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை ஊராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அபிராம் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி