காஞ்சி: புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பொதுமக்கள் கூட்டம்

55பார்த்தது
2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு தினமான இன்று மாமல்லபுரத்தில் காணும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது.

சுற்றுலா தளங்களில் புகழ்பெற்று விளங்க கூடியது மாமல்லபுரம் இங்கு கடற்கரை கோயில் ஐந்து ரதம் புலிக்குகை அர்ஜுனன் தபசு வெண்ணை உருண்டை பாறை கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன சின்னங்களை காண வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு தினமான இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் காணும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தொடர்புடைய செய்தி