செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஆலம் இன்டர்நேஷனல் தனியார் பள்ளியில் பொங்கல் விழா பள்ளியின் தாளாளர் சுமித்ரா தலைமையில் நடைபெற்றது.
இந்த பொங்கல் விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் தமிழர் பாரம்பரிய உடை அணிந்து புதுப்பானையில் பச்சரிசி வெல்லம் வைத்து பொங்கல் பொங்கி வரும் வேளையில் 'பொங்கலோ பொங்கல்' என்று கோஷம் எழுப்பி பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுக்களான கோலப்போட்டி, உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலாட்டம் உள்ளிட்ட தமிழ் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த பொங்கல் விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர். இந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.