மதுராந்தகத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
மதுராந்தகத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு 10. 5 % இட ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து மதுராந்தகம் பஜார் வீதியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு வன்னியர்களுக்கு 10. 5 % இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து இருந்தார் இந்த இட ஒதுக்கிடர்க்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை எனவே தமிழக அரசு உடனடியாக வன்னியர்களுக்கு 10. 5% இட ஒதுக்கிடை வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சதீஷ் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி