பெயர் பலகையால் குழப்பம் செங்கையில் மக்கள் அவதி

50பார்த்தது
பெயர் பலகையால் குழப்பம் செங்கையில் மக்கள் அவதி
செங்கல்பட்டு சக்தி வினாயகர் கோவில் எதிரே, கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஜனவரி மாதம் முதல், வேண்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.

பழைய கலெக்டர் அலுவலகம், தற்போது சப் - கலெக்டர் அலுவலகமாக உள்ளது.

இதன் நுழைவு பகுதியில், கலெக்டர் அலுவலகம் என, நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகை உள்ளதால், பொது இடையே குழப்பம் ஏற்படுகிறது.

அதனால், இங்கு வந்து அதன் பின் புதிய கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டிய நிலைக்கு பஒதுமக்கள் தள்ளப்படுகின்றனர். எனவே, இந்த பெயர் பலகையை மாற்ற, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி