துர்நாற்றம் வீசும் கழிப்பறை உத்திரமேரூரில் பயணியர் அவதி

84பார்த்தது
துர்நாற்றம் வீசும் கழிப்பறை உத்திரமேரூரில் பயணியர் அவதி
உத்திரமேரூர், பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு, வந்தவாசி, போளூர் மற்றும் திருப்பதி போன்ற, 100க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. உத்திரமேரூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணியர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியர், பேருந்து நிலையத்தில் உள்ள பேரூராட்சி கட்டண கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கட்டண கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த கழிப்பறை பெயரளவில் கூட பராமரிப்பு இல்லாமல், மிக மோசமான நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல், கழிப்பறை மது அருந்து கூடாரமாக மாறி உள்ளது.

தொடர்புடைய செய்தி