தாம்பரம் சானடோரியத்தில், மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் உள்ளது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், இங்குள்ள நிறுவனங்களில் பணிபுரின்றனர்.
பணிக்காக, அரசு பேருந்து மற்றும் ரயில்களில் இருந்து வருவோர், ஜி. எஸ். டி. , சாலையை கடந்து, மெப்ஸ் வளாக நிறுவனங்களுக்கு செல்வதற்காக, நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், ஜி. எஸ். டி. , சாலையின் கிழக்கு பகுதியில் உள்ள நகரும் படிக்கட்டுகள், சில நாட்களாக இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, நகரும் படிக்கட்டுகளை சரிசெய்து, வழக்கம் போல் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். "