தாம்பரம் - முடிச்சூர் சாலை, ஜி. எஸ். டி. , - வாலாஜாபாத் சாலைகளை இணைப்பதால், 24 மணி நேரமும்
போக்குவரத்து அதிகமுள்ள சாலையாக உள்ளது.
இச்சாலையில், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில், முடிச்சூர் சீக்கனா ஏரி கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர், சாலையை கடந்து, அடையாறு ஆற்றுக்கு செல்லும் வகையில், மூடு கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. சமீபத்தில் இப்பணி முடிந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் இருவழி
போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. ஆனால், மூடு கால்வாய் பணி காரணமாக, சில மீட்டர் துாரத்திற்கு சாலை சீர்குலைந்து, குண்டும், குழியுமாக படுமோசமான நிலையில் உள்ளது.
தினசரி, 'பீக் ஹவர்' நேரத்தில் அங்கு கடும் நெரிசல் ஏற்படுகிறது. துாசி பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.