செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட முன்னுத்தி குப்பம், நெல்வாய், பழையனூர், இப்பகுதிகளில் நியாய விலை கடை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பள்ளி கட்டிடம், கோரி பொதுமக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது அதை சட்டமன்ற உறுப்பினர் இடம் கோரிக்கை வைத்தனர் அதன் பேரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து முன்னுத்தி குப்பம் பகுதிகளில் நியாய விலை கடை ஏழு லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. நெல்வாய் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. பழையனூர் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகமாக உள்ளதால் கூடுதல் வகுப்பறை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை ஏற்று 23 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது அதேபோன்று ஸ்மார்ட் கிளாஸ் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வழங்கப்பட்டது. இந்த கட்டிடக்கலை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வையாவூர் வி. ஜி. குமரன், இவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி விளக்கு ஏற்றி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.