மாம்புதுார் ஏரி கால்வாய் சிறுபாலம் உடைத்து அகற்றம்

71பார்த்தது
மாம்புதுார் ஏரி கால்வாய் சிறுபாலம் உடைத்து அகற்றம்
உத்திரமேரூர் ஒன்றியம், சின்னாளம்பாடி ஊராட்சி, மாம்புதுார் கிராமத்தில், தனியார் கல் குவாரி செயல்பட மாவட்ட கனிம வளத் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுஉள்ளதாக தெரிகிறது.

கல் குவாரி அமைய உள்ள பகுதிக்கு செல்லும் வாகனங்களால், அப்பகுதியில் உள்ள ஏரி உபரி நீர் கால்வாய் சேதம் அடையாமல் இருக்க, கால்வாயின் குறுக்கே சிறுபாலம் அமைக்க வேண்டி இருந்தது. அதன்படி, துறை ரீதியாக அனுமதி பெற்று கல் குவாரி நிர்வாகம் சார்பில், சமீபத்தில் மாம்புதுார் ஏரி உபரிநீர் கால்வாய் குறுக்கே சிறுபாலம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஏரி நீர் கால்வாய் இணைப்பாக அமைக்கப்பட்ட அந்த சிறுபாலத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலர், பொக்லைன் இயந்திரம் கொண்டு உடைத்து அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து, கல் குவாரி நிர்வாகத்தினர் அளித்த புகாரின்படி, சாலவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி