முள்ளிபாக்கத்தில் எல்லையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

74பார்த்தது
திருப்போரூர் அடுத்த முள்ளிபாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில் இருந்தது பழமை வாய்ந்த திருக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்திட ஊர் மக்கள் முடிவு செய்து அதன்படி கோவில் திருப்பணிகள் நடைபெற்றன அனைத்து திருப்பணிகளும் முடிவடைந்து கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் பல்வேறு வேள்விகள் நடைபெற்று மூன்றாம் கால யாக பூஜை இன்று நிறைவுற்று அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் யாகசாலையில் உள்ள புனித நீர் உள்ள கலசத்தை சிவாச்சாரியார்களுடன் கொண்டு சென்று கோபுர விமானத்திற்கும் மூலவர் அம்மனுக்கும் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீ எல்லை அம்மனை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி