மறைமலைநகர் அருகே அரசு மதுபான கடையில் கள்ள சந்தையில் மது விற்பனை படுஜோர்
ரக ரகமாக சரக்கின் விலையை சொல்லும் கடை ஊழியரின் வீடியோ வைரல்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 அரசு மதுபான கடை பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது
இந்த நிலையில் சிங்கப்பெருமாள் கோவில் அருகே கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் 24 மணி நேரமும் தங்கு தடை இன்றி கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் விற்பனை நடத்துபவர்களிடம் மாமூல் பெற்றுக் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் நீண்ட காலமாக குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்றும் அந்த பகுதியில் அரசு மதுபான கடையிலேயே கள்ள சந்தையில் மது விற்பனையாகும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் அனைத்து ரக மதுக்களும் கள்ளச் சந்தையில் கிடைக்கும் என கூறி ஒவ்வொரு மதுபான விளையும் 200, 250, 300 , 350 என விற்பனை நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காலை வேலையில் மது வாங்குபவர்கள் சைடிஸ் இல்லாமல் மது அருந்துவார்கள் என்று அவர்களுக்கு இலவசமாக முட்டை முதல் சுண்டல் வரை என அனைத்து சைடிஸ்களும் காலையிலேயே மது பிரியர்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது வருகிறது.