சென்னை மேடவாக்கத்தில் ஶ்ரீ கங்கையம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

83பார்த்தது
சென்னை மேடவாக்கத்தில் ஶ்ரீ கங்கையம்மன் ஆலய கும்பாபிஷேக விழா பக்தர்கள் சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 6 ம் தேதி கோயிலில் யாகசாலை அமைத்து விநாயகர் வழிபாடு, மஹா சங்கல்பம், கோபூஜை, மஹா கணபதி ஹோமம், ஶ்ரீ மஹாலக்ஷ்மி ஹோமம், ஶ்ரீ நவக்ரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, பிரசவ வலி, பூர்நாஹிதி தீபாராதனை என முதல் காலயாக பூஜைகள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து நேற்று கணபதி பூஜை மற்றும் 2 ம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.

இன்று காலை முதல் யாக சாலையில் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் யாகம் வளத்தி புண்ணிய தளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை வைத்து 4 ம் கால யாக பூஜை மங்கள வாத்தியம், கைலாய வாத்திய இசையுடன் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மங்கள இசையுடன் கலசம் புறப்பட்டு அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர், ஶ்ரீ வலம்புரி விநாயகர், ஶ்ரீ கங்கையாம்மன், ஶ்ரீ வடக்கீர்வரர், ஶ்ரீ வள்ளி தேவசேனா, சமேத சிவ சுப்பிரமணியர், ஶ்ரீ தேவி பூ சமேத, ஶ்ரீ நிவாச பெருமாள் மற்றும் பரிவார ஆலய ஶ்ரீ கங்கையம்மன் உள்ளிட்ட சாமிகள் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து கருவறையில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கங்கையம்மனுக்கு புனிதநீர் ஊற்றி அலங்காரம் செய்து தீபாராதனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட 500 ககும் மேற்பட்டவர்க்கி அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி