அஷ்டபுஜ பெருமாள் கோவில் 26ல் கும்பாபிஷேகம்

57பார்த்தது
அஷ்டபுஜ பெருமாள் கோவில் 26ல் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே திருத்தலம் என, அழைக்கப்படும் அஷ்டபுஜப் பெருமாள் கோவிலானது பேயாழ்வார், திருமங்கையாழ்வர் ஆகிய இருவரால் மங்களாசாசனம்செய்யப்பெற்ற 108 திவ்யதேசங்களில் 44வது திவ்யதேசமாக விளங்கி வருகிறது.

இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 26ல் நடக்கிறது. இதையொட்டி 2 கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு திருப்பணி நடந்துள்ளது. கோவில் திருக்குளம் முழுதும் சீரமைக்கப்பட்டுள்ளது.

குளத்தின் சுவரில், பெருமாளின் தசாவதாரமான மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என, 10 அவதார சிற்பங்களும், ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளிட்ட சிற்பங்கள் வடிவமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி இன்று யாகசாலை பூஜை துவங்குகிறது. வரும் 26ல் காலை 6: 30 மணிக்கு அனைத்து விமானங்களுக்கும், 7: 00 மணிக்கு மூலஸ்தான மூர்த்திகளுக்கும், சன்னிதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

மாலை 5: 00 மணிக்கு உற்சவர் வீதியுலா நடக்கிறது என, அஷ்டபுஜ பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். கே. பி. எஸ். சந்தோஷ்குமார், கோவில் செயல் அலுவலர் ரா. கார்த்திகேயன் ஆகியோர் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி