திருப்போரூர் பேரூராட்சியில் சுகாதார பணிகள் தீவிரம்

270பார்த்தது
திருப்போரூர் பேரூராட்சியில் சுகாதார பணிகள் தீவிரம்
திருப்போரூர் பேரூராட்சி, 8வது வார்டு, புது தெருவில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, புதிய சாலை, கால்வாய் அமைப்பதற்காக, தெருவில் பள்ளம் தோண்டி சமன் செய்யப்பட்டுள்ளது.

எனினும், பாதாள சாக்கடை பணியால், அடுத்த கட்ட பணிகள் துவங்கவில்லை. மேலும், சாலையில் சில இடங்களிலும், தாழ்வான பகுதியிலும் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தியாகி மக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.


இது குறித்து, நேற்று முன்தினம் நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, அப்பகுதி கவுன்சிலர் சி. டி. எஸ். குமரன் அரசு, மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்தார்.

பின், பேரூராட்சி பணியாளர்களை வரவழைத்து, கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க புகை மருந்து அடிக்கப்பட்டது. ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்தி, சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி