செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்திற்குட்பட்ட பனையூர் கிராமத்தில் வசித்தவர் ஆண்டாள் அம்மாள் இவர்களுக்கு சொந்தமாக 42 சென்ட் இடம் உள்ளது. இதனை ஆவரஞ்சு என்பவரது மகன்கள் கனகராஜ் சௌந்தர்ராஜன் சேகர் ஆகிய மூவரும் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் 50 அடி ஆட்களுடன் மூன்று டிராக்டர்களைக் கொண்டு ஆண்டாள் அம்மாளுக்கு சொந்தமான அவர்கள் வீட்டின் அருகே உள்ள கம்பி வேலியை சேதப்படுத்தியுள்ளனர்.
இதனை தடுக்க வந்த ஆண்டாள் அம்மாவின் பேரப்பிள்ளை ஸ்ரீதர் மற்றும் அவரது தந்தை தாயையும் அங்குள்ள குண்டர்கள் கடுமையான ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த ஸ்ரீதர் அவரின் தந்தை தாய் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து செய்யூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தும் இந்நாள்வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.