உத்திரமேரூர் ஒன்றியம், காட்டங்குளம் ஊராட்சி தலைவர் செல்வகுமரன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம், படூர் மற்றும் காட்டாங்குளம் ஆகிய வருவாய் கிராமத்திற்கு வி. ஏ. ஓ. , நியமிக்கக் கோரி, நேற்று மனு அளித்தார்.
மனு விபரம்:
உத்திரமேரூர் ஒன்றியத்தில், காட்டாங்குளம், படூர் ஆகிய வருவாய் கிராமத்திற்கான கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர், எட்டு மாதங்களுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து, சிறுமையிலூர் பகுதிக்கான கிராம நிர்வாக அலுவலர், காட்டாங்குளம் மற்றும் படூர் வருவாய் கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர் பணி சுமை, கூடுதல் தூரம் போன்ற சிரமங்களால் சரிவர செயல்பட முடியாத நிலை உள்ளது. இதனால், காட்டாங் குளம் மற்றும் படூர் பகுதியினர், வருவாய் துறை சம்பந்தமான சேவைகளை பெறுவதில் சிரமப்படுகின்றனர்.
எனவே, படூர், காட்டாங்குளம் ஆகிய வருவாய் கிராமத்திற்கு முழு நேரம் பணியாற்றும் வகையில், கிராம நிர்வாக அலுவலர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,