ஆந்திர மாநிலம் தடா பகுதியில் பிரபல கஞ்சா மொத்த வியாபாரியான நெல்லூர் ராஜேஷ் கார்த்தி என்பவரிடம் இருந்து 30ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு கிலோ கஞ்சாவை வாங்கிக்கொண்டு தடா ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி மின்சார ரயில் மூலம் செங்கல்பட்டு ரயில்நிலையத்திற்குகஞ்சா எடுத்து வருவதாக அவசர போலீஸ் "100" கால்ஸ் மூலம் செங்கல்பட்டு நகர காவல்
நிலையத்திற்கு ரகசிய
தகவல் கிடைத்தது.
தகவலின்படி செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சந்தேகப்
படும்படியாக நின்ற ஒரு பெண் உள்பட இருவரை செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் ஏழுமலை என்பவரது மகன் ராஜ்
மற்றும் சந்தியா என்கிற மகேஸ்வரி என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து
2கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
இவர்கள்வழக்கமாக வாயலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரதுமகன் தீனா(24)
மற்றும் ராதாகிருஷ்ணன் என்பவரது விஷ்வா(24) ஆகிய இருவரது வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்தபோது அவர்கள் வீட்டிலிருந்து 10 கிராம் பாக்கெட் வீதம் 70 கஞ்சா பாக்கெட்டுகள்
700கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இந்த நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.