பயணியர் நிழற்குடையில் மின்விசிறிகள் மாயம்

82பார்த்தது
பயணியர் நிழற்குடையில் மின்விசிறிகள் மாயம்
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பேருந்து நிறுத்தத்தில், காஞ்சிபுரம் தி. மு. க. , - எம். எல். ஏ. , எழிலரசன் ஒதுக்கீடு செய்த நிதியில், இருக்கை வசதி, மின்விளக்கு, மின்விசிறியுடன் நவீன பயணியர் நிழற்குடை, இரு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

செங்கல்பட்டு தடத்தில் செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் பயணியர் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நிழற்குடையில் பொருத்தப்பட்டிருந்த இரு மின்விசிறிகளும் மாயமாகியுள்ளது.

எனவே, பயணியர் நிழற்குடையில் மின்விசிறி பொருத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி