கூடுவாஞ்சேரியில் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

1556பார்த்தது
சிலம்பம் சுற்றியும், 108 சூரத் தேங்காய் உடைத்தும் மலர் தூவியும காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு.

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆங்காங்கே பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் வேட்பாளர்கள் உறுப்பினர்கள் என அனைவருமே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட 30 வார்டு பகுதிகளிலும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம் அவர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

அப்போது கூடுவாஞ்சேரி அருகே 18வது வார்டு பகுதியில் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம். கே. டி சரவணன் தலைமையில் வேட்பாளர் செல்வம் பாபு சேகரிப்பில் ஈடுபட்டார்
அப்போது அவரை வரவேற்கும் விதமாக சிலம்பம் சுற்றியும், மலர் தூவியும், 108 சூரத் தேங்காய் உடைத்தும் பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்

பின்பு வேட்பாளருக்கு மாலை அணிவித்து வெள்ளி வால் மற்றும் அம்பேத்கர் புகைப்படத்தை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்

வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி முதுசூதனன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி