துார்ந்து கிடக்கும் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

51பார்த்தது
துார்ந்து கிடக்கும் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு இந்திரா நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறுவதற்காக வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழைக்காலத்தில் கால்வாய் வழியாக வெளியேற வேண்டிய மழைநீர் குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது: மழைநீர் வடிகால்வாய் கட்டும்போது இடுப்பளவு ஆழம் இருந்தது. கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாய் மண் துகள், குப்பை குவியல், செடி, கொடிகளால் துார்ந்து, தற்போது 1 அடி அளவிற்கு மட்டுமே கால்வாயில் தண்ணீர் செல்ல வழி உள்ளது. மீதமுள்ள பகுதி கழிவுகளால் துார்ந்துள்ளது. சில இடங்களில் கால்வாய் இருப்பதற்கான தடமே தெரியாத அளவிற்கு மண் திட்டுகளாக மாறியுள்ளது. செடி, கொடிகளும் மண்டியுள்ளன. இதனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், ஒரே இடத்தில் தேங்குவதால், இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், மழைக்காலத்தில் கால்வாய் வழியாக வெளியேற வேண்டிய மழைநீர், தெருவில் தேங்கும் நிலை உள்ளது. எனவே, செவிலிமேடு, இந்திரா நகரில் உள்ள கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி