தாம்பரத்தில் சாலையில் விரிசல்.. வாகன போக்குவரத்து மாற்றம்

63பார்த்தது
தாம்பரத்தில் சாலையில் விரிசல்.. வாகன போக்குவரத்து மாற்றம்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், இரும்புலியூர் பாலத்தில், 1 கி.மீ. தூரத்திற்கு சாலை, இருவழிப்பாதையாக உள்ளதால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், கடும் நெரிசல் ஏற்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இப்பிரச்சினைக்கு தீர்வாக, அங்கு ரயில்வே பாலத்தையும், சாலையையும் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக, பீர்க்கன்காரணை உள்ளிட்ட பகுதியினர் பயன்படுத்தும் வகையில், வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இச்சுரங்கப்பாதை, 'பிரீகாஸ்ட்' எனும் ரெடிமேட் சிமென்ட் பெட்டி முறையில் அமைக்கப்படுகிறது. இந்த முறையில், 195 அடி நீளத்திற்கு, ஐந்து ரெடிமேட் பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன. இரு பெட்டிகள் பொருத்தப்பட்டு, மூன்றாவது பெட்டியை நகர்த்தும் பணி நடந்து வருகிறது. 

சிமென்ட் பெட்டியை நகர்த்துவதால், மேற்பகுதியில், தாம்பரம் - பெருங்களத்தூர் மார்க்கமான ஜி.எஸ்.டி. சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று (டிசம்பர் 21) காலை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரிசல் ஏற்பட்ட இடத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டன. தாம்பரத்தில் இருந்து செல்லும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள், பழைய சாலை வழியாகவும், மற்ற வாகனங்கள் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக போடப்பட்ட சாலை வழியாகவும், இரு பகுதிகளாக பிரித்து அனுப்பப்படுகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி