பைக் மீது லாரி மோதி செங்கையில் தம்பதி பலி

80பார்த்தது
பைக் மீது லாரி மோதி செங்கையில் தம்பதி பலி
செங்கல்பட்டு அடுத்த பாலுார், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கங்காதரன், 52. இவர், நேற்று காலை தனது டி. வி. எஸ். , - எக்ஸ். எல். , இருசக்கர வாகனத்தில், தன் மனைவி அமுலு, 46, செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திம்மாவரம் பழவேட்டம்மன் நகர் அருகில் வந்த போது, பின்னால் வந்த டாரஸ் லாரி, கங்காதரனின் இருசக்கர வாகனத்தில் மோதி ஏறி இறங்கியது.

இதில், கங்காதரன் சம்பவ இடத்திலேயே பலியானார். சக வாகன ஓட்டிகள் அமுலுவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், கங்காதரன் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அமுலு, சிகிச்சை பலனின்றி 11: 30 மணிக்கு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி