குன்றத்துார்: சாலையில் தீப்பற்றி எரிந்த கார்.. பரபரப்பு

74பார்த்தது
குன்றத்துார்: சாலையில் தீப்பற்றி எரிந்த கார்.. பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ்குமார் (37). இவர், மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்று (ஜனவரி 10) காலை, வழக்கம்போல் வீட்டில் இருந்து, 'ஸ்கோடா' காரில் பணிக்குப் புறப்பட்டார். 

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில், குன்றத்தூர் அருகே உள்ள திருமுடிவாக்கம் பகுதியைக் கடந்த போது, காரின் முன்புறத்தில் திடீரென புகை வந்தது. இதனால், காரை சாலையோரம் நிறுத்தி, கீழே இறங்கிய போது மளமளவென தீ பரவியது. இதுகுறித்து, உமேஷ்குமார் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள், கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து, குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி