மின்கம்பம் சேதம் மாற்றி அமைக்கப்படுமா?

56பார்த்தது
மின்கம்பம் சேதம் மாற்றி அமைக்கப்படுமா?
மதுராந்தகம் நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது. தற்போது, நகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக, மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ், 30. 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுகளிலும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் எடுக்கப்பட்டு, தண்ணீர் செல்லும் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

கடப்பேரி, திருவள்ளுவர் தெரு பகுதியில், குழாய் பதிப்பதற்கான பள்ளம் எடுக்கப்பட்ட போது, ஜே. சி. பி. , இயந்திர ஓட்டுனரின் கவனக்குறைவால், மின்கம்பத்தின் மீது வாகனம் மோதி சேதமடைந்தது. இதனால், மின்கம்பம் உடைந்து, கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. சேதமடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி, புதிதாக அமைக்க கோரி, பகுதி வாசிகள் மின்வாரியத் துறையினருக்கு பலமுறை மனு அளித்தனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மழைக் காலங்களில், உடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால், உயிர்ச்சேதம் ஏற்படும் அபாய சூழ்நிலை உள்ளது. எனவே, மின்வாரிய துறையினர், சேதமான மின்கம்பத்தை அகற்றி, புதிதாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you