செங்கல்பட்டு மாவட்டத்தில் மனை தொழில் முனைவோருக்கு அழைப்பு

64பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் மனை தொழில் முனைவோருக்கு அழைப்பு
தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்பேட்டைகளில், தொழில் மனை பெற விரும்பும் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:


திருப்போரூர் தாலுகாவில், ஆலத்துார் பகுதி -1, பகுதி 2, தண்டரை கிராமம் மற்றும் செய்யூர் தாலுகாவில், கொடூர் கிராமத்தில் தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன. தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான இந்த தொழிற்பேட்டைகளில், ஆலத்துார் பகுதி 1ல், ஒன்று, ஆலத்துார் பகுதி 2ல் 157, தண்டரை கிராமத்தில் 12, கொடூர் கிராமத்தில் 84 ஆகிய தொழில் மனைகள் காலியாக உள்ளன.


புதிதாக தொழில் துவங்க, தொழில் மனைகள் வாங்க விரும்புவோர், https: //www. tansidco. tn. gov. in என்ற இணையதளம் வாயிலாக, தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.


மேலும், தமிழ்நாட்டில் சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலிமனைகளின் விபரங்களையும், மேற்கண்ட இணையதளத்தின் வாயிலாகவே தெரிந்துகொண்டும் தேவையானவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். தொடர்பு எண்: 94450 06565.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி