அகில இந்திய பால் பேட்மின்டன் எஸ். ஆர். எம். , பல்கலை சாம்பியன்

61பார்த்தது
அகில இந்திய பால் பேட்மின்டன் எஸ். ஆர். எம். , பல்கலை சாம்பியன்
இந்திய பல்கலை சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஜேப்பியார் பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான பால் பேட்மின்டன் போட்டி, செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பல்கலை வளாகத்தில், ஐந்து நாட்கள் நடந்தன.

போட்டியில், சென்னை பல்கலை, ஜேப்பியார் பல்கலை உட்பட 72 பல்கலை அணிகள் பங்கேற்றன. முதலில் 'நாக் அவுட்' முறையிலும் அரையிறுதியில் இருந்து, 'லீக்' முறையிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.

லீக் போட்டியில், எஸ். ஆர். எம். , அணி, 35 - 24, 35 - 20 என்ற கணக்கில் அண்ணா பல்கலையையும், மற்றொரு போட்டியில், பாரதிதாசன் பல்கலை, 35 - 28, 35 - 27 என்ற கணக்கில் பாரதியார் பல்கலை அணியையும் தோற்கடித்தன.

நேற்று நடந்த போட்டியில், எஸ். ஆர். எம். , அணி, 37 - 35, 34 - 35, 35 - 29 என்ற கணக்கில் பாரதியார் பல்கலையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அனைத்து போட்டிகளின் முடிவில், காட்டாங்கொளத்துார் எஸ். ஆர். எம். , அணி முதலிடத்தையும், பாரதிதாசன் பல்கலை இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

தொடர்ந்து, பாரதியார் பல்கலை மற்றும் அண்ணா பல்கலை அணிகள் மூன்று மற்றும் நான்காம் இடங்களை வென்றன.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, ஜேப்பியார் பல்கலையின் நிறுவனர் மற்றும் வேந்தர் ரெஜினா முரளி பரிசுகளை வழங்கினர்.
Job Suitcase

Jobs near you