அச்சரபாக்கம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டம்

69பார்த்தது
அச்சரபாக்கம் தனியா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் தனியா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மே 5 தேதி வணிக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பலைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் டைமன் ராஜா வெள்ளையன் அவர்கள் கலந்து கொண்டு மாநாட்டில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து சங்கம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் சங்க நிர்வாகிகளுக்கு ஏற்படும் இன்னல்களை எவ்வாறு கையாளுவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில்
மாநில அவைத்தலைவர் தேவராஜ், மாநில பொதுச் செயலாளர் ராகவேந்திரா மணி, மாநில பொருளாளர் ஹரிகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் இமானுவேல் ஜெயசீலன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் உமாபதி, மாவட்ட பொருளாளர் கார்த்திக், இணை ஒருங்கிணைப்பாளர்
கௌதம் உள்ளிட்ட
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி