சென்னை அடுத்த கோவிலம்பாக்கதை சேர்ந்தவர் மோகனலஷ்மி(19), இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு உதவி மருத்துவம் அறிவியல் படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மோகனலஷ்மி, மதியம் வகுப்பறையில்
கணினி வழி தொடுதிரையில் தொட்டு பாடத்தை சக மாணவர்களுக்கு விளக்கி கொண்டிருந்தார். அப்போது மோகனலட்சுமி, வகுப்பறையில் சக மாணவர்கள் முன்பாக நெஞ்சுவலி என சுருண்டு விழுந்துள்ளார். அதன்பின் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் பிரேதத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுகாக அனுப்பியுள்ளார். முதற்கட்டமாக மாரடைப்பு காரணமா? புட் பாய்சனாக மாறியதா? வேறு என்ன காரணம் என மருத்துவ கூறாய்வு அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னையில் கல்லூரி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.