தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் மேற்கொள்ள இருக்கும் அடிப்படை வசதிகள், திருப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து, 2023 ஏப்ரல் மாதம் சட்டசபை மானிய கோரிக்கையில், அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
இதையடுத்து, அமைச்சர்அறிவித்த பல்வேறு அறிவிப்புகளில், கோவில் திருப்பணிகள் இன்னும் துவக்காமலேயே இருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 25 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும் என தொடர்ச்சி 4ம் பக்கம்
அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, கோவிலில் நடைபெறவுள்ள திருப்பணிகள் பற்றிய மதிப்பீடு தயாரித்து அனுப்பியுள்ளனர்.
ஆனால், பல கோவில்களில் டெண்டர் பணிகள் கூட இன்னும் துவங்காமல் உள்ளது. மேலும், பல கோவில்களில் திருப்பணிகள், குளம் சீரமைப்பு நடைபெறுவதற்கான பூர்வாங்க பணிகள் கூட நடைபெறவில்லை என புகார் எழுந்துள்ளது.
சட்டசபை அறிவிப்புகளில் இளையனார்வேலுார், கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளிட்ட சில கோவில்களில் பாலாலயம் நடந்து, திருப்பணிகள் துவங்கி உள்ளன.
அதேபோல், கச்சபேஸ்வரர் கோவில் தேர்க்கொட்டகை அமைக்கும் பணிகள் மட்டும் சமீபத்தில் நடந்தது. ஆனால், மாவட்டத்தின் பெரிய கோவில்களில் அறிவிக்கப்பட்ட திருப்பணிகள் எப்போது துவங்கும் என, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.