தேசிய நெடுஞ்சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் மற்றும் புக்கத்துறை பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது இதன் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஆனது ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வார இறுதி நாள் மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் தென் மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான வாகனங்கள் சென்னை நோக்கி ஒரே நேரத்தில் படையெடுப்பதால் மாமண்டூரில் இருந்து படாளம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கார்கள், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் என அனைத்து
வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கிறது.
இதேபோன்று மதுராந்தகம் புறவழி சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலானது ஏற்படுகிறது.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால்
சென்னை நோக்கி செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் இந்த 10 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வாகனங்களை இயக்கி செல்ல வேண்டிய ஒரு சூழலானது ஏற்பட்டுள்ளது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.