செங்கல்பட்டில் சாலையை சீர் செய்து வரும் போக்குவரத்து காவலர்

76பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்னை திருச்சி மற்றும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பெஞ்சல் புயல் காரணமாக சாலைகள் ஆங்காங்கே படும் மோசமாகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து அப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. 

இந்த நிலையில் நாளைய தினம் 2025 புத்தாண்டு தினம் என்பதால் அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வெளியில் செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு 2025 ஆம் ஆண்டு எந்த விபத்துகளும் இந்த பள்ளத்தினால் ஏற்படக்கூடாது என மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து காவலர்கள் ஒன்றிணைந்து சிமெண்ட் கலவையை கொண்டு ஆங்காங்கே இருக்கும் பள்ளங்களில் ஜல்லி கொட்டி சிமெண்ட் கலவையால் போட்டு பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து காவலர்களின் இந்த செயலுக்கு சக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி