அச்சரப்பாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கம் ஒன்றியம் அத்திவாக்கம் , களத்தூர், பகுதிகளில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தை அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரங்கராஜன் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், தலைமைக் கழக பேச்சாளர் காவேரி இவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் இதில் தலைமைக் கழக பேச்சாளர் காவிரி பேசுகையில்
திமுக தேர்தல் வாக்குறுதியில் 520 வாக்குறுதிகள் அளித்தனர் ஆனால் இதுவரை ஐந்து சதவீதம் வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை
பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது ஆனால் இந்த திமுக ஆட்சி பொறுப்பேற்றிலிருந்து மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டதா
திமுக ஆட்சியில் நீட் தேர்வு ஒழிப்போம் என்று ஆட்சிக்கு வந்துவிட்டு இதுவரை நீட்டு ஒழிப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து 23 குடும்பங்கள் சீரழிந்து உள்ளனர்.