நெடுஞ்சாலையில் மழைநீர் அகற்ற கோரிக்கை

59பார்த்தது
நெடுஞ்சாலையில் மழைநீர் அகற்ற கோரிக்கை
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஆறுவழி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, சென்னை, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து பெங்களூரு மார்க்கம். பெங்களூரு, ஒசூர், வேலுார் ஆகிய மார்க்கங்களில் இருந்து, சென்னை செல்லும் வாகனங்கள் செல்கின்றன. இதுதவிர, இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன.

தற்போது, புதிதாக போடப்பட்ட ஆறுவழி சாலையோரம், மழை பெய்தால் தண்ணீர் வடியும் அளவிற்கு வடி கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டிருப்பதால், மழை பெய்த பின் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தண்ணீரில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

வெள்ளைகேட் மேம்பாலம் அருகே, வாகனங்கள் எதிரெதிரே செல்லும் போது, மழைநீர் மற்றொரு வாகனத்தின் மீது தெளிக்கும் சூழல் ஏற்படுகிறது.

எனவே, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி